திருப்பதியில் இன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்தாகிறது

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      ஆன்மிகம்
tirupathy 2019 08 26

திருப்பதி : திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதையொட்டி 5 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் வரும் 30-ம்தேதி முதல் அக்.8-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவில் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. அதனால் இன்று  காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.

ஆண்டுக்கு 4 முறை வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோவில் சுத்தப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து