முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோகிராம் பைல்களை கைப்பற்றி பணம் கேட்டு மிரட்டும் ஆன்லைன் ஹேக்கர்கள்: அச்சத்தின் உச்சத்தில் போட்டோ-வீடியோகிராபர்கள்:

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

புரோகிராம் பைல்களை கைப்பற்றி பணம் கேட்டு மிரட்டும் ஆன்லைன் ஹேக்கர்கள்: அச்சத்தின் உச்சத்தில் போட்டோ-வீடியோகிராபர்கள்:
திருமங்கலம்.- திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புரோகிராம் பைல்களை கைப்பற்றிக் கொண்டு பணம்
இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டு வருபவர்களின் கணிணிகளில் உள்ள பைல்கள் அனைத்தையும் கைப்பற்றி தொல்லை கொடுத்திடும் மர்ம நபர்கள் ஹேக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.மூளையை உபயோகப்படுத்தி உலகம் முழுவதிலும் இது போன்ற நாசவேலைகளில் ஈடுபடும் ஹேக்கர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படுகின்றனர்.இவர்களின் அட்டகாசத்தால் இந்தியா மட்டுமின்றி உலகநாடுகளில் பலவற்றில் உள்ளவர்கள் தங்களது புரோகிராம் பைல்களை இழந்து பரிதவித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் இது கோன்ற ஹேக்கர்களின் தாக்குதலுக்கு போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் ஆளாகி வருவது வேதனையான ஒன்றாகும்.
இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பவர்கள் தங்களது புரோகிராம் பைல்கள் அனைத்தையும் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கணிணிகள் சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இவ்வாறாக அதிகளவு போட்டோ மற்றும் வீடியோ பைல்களை சேமித்து வைத்திடும் கணிணிகளை இலக்காக வைத்து இன்டர்நெட் மூலம் பல்வேறு ஆபத்தான மெயில்களை அனுப்பி ஹேக்கர்கள் அனுப்பி வைக்கின்றனர்.ஆசையை தூண்டும் வகையில் தலைப்பிடப்பட்ட மெயில்களை போட்டோ,வீடியோகிராபர்கள் திறந்திடும் போது கணிணியில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டு ரீபூட் ஆகிறது.அப்போது கணிணியில் உள்ள புரோகிராம் பைல்கள் அனைத்தும் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டு கணிணி முடங்கி விடுகிறது.இதே போல் தேவையற்ற சாப்ட்வேர்களை நிறுவிட முயலும் போதும் ஹேக்கர்களால் கணிணியில் உள்ள பைல்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் மாயமாகி விடுகிறது.
இதனை தொடர்ந்து தான் ஹேக்கர்களின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.கணிணியில் உள்ள பைல்கள் எல்லாம் மாயமாகி இருப்பதையறிந்த போட்டோ,வீடியோகிராபர்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் சமயத்தில் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய அந்த கணிணிக்கு ஹேக்கர்களிடமிருந்து டாலர் வடிவில் பணம் கேட்டு மிரட்டல் தகவல் வந்திடுகிறது.பைல்களின் அளவினை பொறுத்து ஹேக்கர்கள் 50ஆயிரம் முதல் 5லட்சம் வரையில் பணம் கேட்டு தற்போது மிரட்டல் விடுத்து வருகின்றனர்.மேலும் பணத்தை  ஒரு வாரத்திற்குள்ளாக கொடுக்காவிட்டால் பைல்கள் அனைத்தையும் அழித்துவிடப்போவதாக ஹேக்கர்கள் மிரட்டும் சமயத்தில் போட்டோ, வீடியோகிராபர்கள் அச்சததின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.ஏனென்றால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் விரக்தியின் விளிம்பிற்கே போட்டோ வீடியோகிராபர்கள் சென்றுவிடுகின்றனர்.ஹேக்கர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகின்றனர் என்ற விபரம் தெரியாமல் இருப்பதாலும்,பணம் அனுப்பினால் அவர்கள் “கீ” பாஸ்வேர்டு எண் கொடுத்து பைல்களை திரும்பவும் அனுப்புவார்கள் என்ற உத்தரவாதம் இல்லாததாலும் பல்வேறு பிரச்சனைகளில் போட்டோ, வீடியோகிராபர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் செக்காணூரணி பகுதியில் கடந்த 23ஆண்டுகளாக போட்டோ வீடியோ தொழில் செய்து வரும் மகேந்திரன் என்பவர் கடந்த 29-ம் தேதி இணையதளத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது தனது கணிணியில் சேமித்து வைத்திருந்த போட்டோ,வீடியோ பைல்களை அனைத்தையும் ஹேக்கர்களிடம் இழந்துள்ளார்.இதையடுத்து சில மணி நேரங்களில் அவரது கணிணிக்கு வந்த இணையதள தகவலில் 72மணி நேரத்திற்குள்ளாக இந்திய மதிப்பில் ரூ.72ஆயிரம் டாலராக கீழ்கண்ட இணையதள முகவரிக்கு கிரெடிட் செய்திட வேண்டும் என்று  ஹேக்கர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இதனால் அச்சமடைந்த மகேந்திரன் இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் செய்துள்ளார்.அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீசா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீசா ரேன்சம்வேர் ஹேக்கர்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்திட, விலை உயர்ந்த,அத்தியாவசியமான புரோகிராம் பைல்களை இணையதள இணைப்புடன் கூடிய கணிணிகளில் சேமித்து வைப்பதை தவிர்த்திட வேண்டும்,மேலும் கணிணியில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து பைல்களையும் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்குகளில் கூடுதலாக பதிவு செய்திட வேண்டும்,புரோகிராம் பைல்கள் உள்ள கணிணிகளில் வரும் தேவையற்ற ஸ்பேம் தகல்களை திறந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்,தேவையற்ற சாப்ட்வேர்களை கணிணியில் பதிவிறக்கம் செய்வதை நிறுத்திட வேண்டும்,தேவைப்பட்டால் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களை நிறுவிட வேண்டும் என்று கணிணியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இணையதள இணைப்புடன் கூடிய கணிணிகளில் புரோகிராம் பைல்களை சேகரித்து வைத்திருக்கும் போட்டோ வீடியோகிராபர்கள் இனியாவது விழிப்புணர்வு பெற்றிட வேண்டும் என்பதே வல்லுனர்களின் அட்வைஸாக உள்ளது….

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து