முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது கணவர் என்னை அடிக்கவில்லை - பென் ஸ்டோக்சின் மனைவி ஆவேசம்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : எனது கணவர் என்னை அடிக்கவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்சின் மனைவி டுவிட்டரில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலையில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி முதன்முறையாக பட்டம் வென்று அந்நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதன் இறுதி போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (வயது 28) ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறவும், கோப்பையை வெல்லவும் உதவினார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஆஷஸ் தொடரிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 135 ரன்களை குவித்தது அந்த அணி வெற்றி பெற உதவியது.

இதனால் இந்த ஆண்டிற்கான வீரர்களுக்கான வீரர் விருதுக்கு பென் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக கடந்த வாரத்தில் தொழில் முறை கிரிக்கெட் வீரர்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பென் தனது மனைவி கிளார் ஸ்டோக்சுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், அவர் தனது மனைவி கிளாரின் கழுத்தின் மேல் கை வைத்திருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகின. இதனால் ஸ்டோக்சுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு விட்டது என தகவல்கள் பரவின. ஒரு கட்டத்தில் அமைதியை இழந்த கிளார், டுவிட்டரில் இதற்கான விளக்கத்தினை தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

என்ன ஒரு முட்டாள்தன தகவலை மக்கள் பரப்புகின்றனர். என்னால் நம்பவே முடியவில்லை. நானும், பென்னும் ஒருவருக்கொருவர் எங்களது முகத்தினை பிடித்து அழுத்தினோம். ஏனெனில் எங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பு வெளிப்படவே நாங்கள் இப்படி நடந்து கொண்டோம். இது சண்டையில்லை. ஆனால் சிலர் இதனை தவறாக சித்தரித்து பரப்பி விட்டுள்ளனர் என ஆவேசமுடன் தெரிவித்துள்ளதுடன் தனது கணவர் பென்னின் முகத்தில் செல்லமுடன் அடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இந்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து