முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் பாலகோட் தாக்குதலுக்கு எல்லை தாண்ட தேவை இருந்திருக்காது: ராஜ்நாத்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் பாலகோட் தாக்குதலுக்கு எல்லை தாண்ட தேவை இருந்திருக்காது என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள அரியானா சென்ற ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் பாலகோட் தாக்குதலுக்கு எல்லை தாண்ட தேவை இருந்திருக்காது. ரபேல் விமானங்கள் மணிக்கு 2,130 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை. இயல்பாக 1,912 கிமீ வேகத்தில் பறக்கும். இதனால் எதிரிகளால் ஏவுகணைகளை வீசி தகர்ப்பது சிரமம். ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதனால் ரபேல் இருந்திருந்தால் இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்திருக்க முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

ரபேல் போர் விமானத்தில் ஓம் என எழுதி ரக்சா பந்தன் கயிறை கட்டினேன். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து சர்ச்சை எழுப்பி வருகின்றனர். அவர்கள், ரபேல் விமானத்தை வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக விமர்சிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் வெளியிடும் அறக்கைகள் பாகிஸ்தானை பலப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து