முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வுக்குழுவினருடன் டோனியின் எதிர்காலம் குறித்து 24-ல் ஆலோசனை - சவுரவ் கங்குலி சொல்கிறார்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

டோனி விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் 60 டெஸ்டில் தலைமை வகித்து அணிக்கு 27 வெற்றிகளை தேடித் தந்தார். இந்நிலையில் 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார்.  சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் உலக கோப்பைக்கு பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக டோனி கூறி சென்றார். இந்நிலையில் டோனியின் எதிர்காலம் குறித்தும் ஓய்வு பெறுவது குறித்தும் அவரே முடிவு எடுப்பார், அவரை ஓய்வு பெற வற்புறுத்தக்கூடாது. மேலும் ஒய்வு குறித்து டோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இது தொடர்பாக பேசுகையில், டோனியின் எதிர்காலம் குறித்து 24-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். அப்போது டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் ஆலோசனை நடத்தப்படும். மேலும் டோனியுடனும் கருத்து கேட்கப்படும். பின்னர் எனது கருத்தை தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து