ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      ஆன்மிகம்
sabarimalai temple 2019 09 07

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்தினார். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
நேற்று  (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடந்தது.

தொடர்ந்து, 22-ந் தேதி வரை படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். 22-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். சித்திரை திருநாள் ஆட்ட திருவிழாவையொட்டி கோவில் நடை 26- ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 27- ந் தேதி சித்திரை ஆட்ட திருவிழா, சிறப்பு பூஜைகள் நடைபெற்று நடை அடைக்கப்படும். பின்னர், மண்டல பூஜைக்காக நவம்பர் 16- ந் தேதி கோவில் நடை திறக்கப்படும். அன்றைய தினம் புதிய மேல்சாந்திகள் மூல மந்திரங்களை சொல்லி பொறுப்பேற்று கொள்வார்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து