முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதி நீக்க தீர்மானம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது, டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.  232-196 வாக்குகள்  என்ற அடிப்படையில் டிரம்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நாடாளுமன்ற விசாரணையில் டிரம்பின் வழக்கறிஞர்களின் உரிமைகளை வழங்குவதற்கு சரியான நடைமுறைகளையும் இந்த தீர்மானம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில்,  தனக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கடும் எதிர்வினையாற்றியுள்ள அமெரிக்க அதிபர்  டிரம்ப்,  தேர்தலை கவிழ்க்க அவர்கள் சதி செய்து வருகின்றனர். ஜனநாயக கட்சியினர் அளித்த வாக்குகள் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.  ஆனால்,  குடியரசுக்கட்சியினர் மிகவும் உறுதியாக உள்ளனர். இதுவரை நான் பார்த்திராத அளவுக்கு வலுவாகவும் ஒற்றுமையாகவும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து