இறங்கு முகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 272 குறைந்தது

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      வர்த்தகம்
gold price 2019 09 29

சென்னை : சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 272 குறைந்து, ரூ. 29.264-க்கு விற்பனையானது. ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 குறைந்து ரூ. 3,658-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் காணப்படுகிறது.

மேலும் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சற்று இரக்கம் காணப்பட்டு தான் வருகிறது. இதையடுத்து, நேற்று விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த 4-ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து ரூ. 29,608-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 3,701க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து 50.50 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 272 குறைந்து, ரூ.29.264-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் 24 கேரட் தூய தங்கம் ரூ. 39.580க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து