ஒட்டன்சத்திரம் அருகே பனை விதை நடும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      திண்டுக்கல்
10 Palm seed planting

ஒட்டன்சத்திரம் - .திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நீலமலை கோட்டை ஊராட்சியில்சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆலோசனையின் படி ஆக்கிறமிப்ப்பிலுருந்து மீட்கப்பட்ட நீர் வழி தடங்களில், ஓடை கரைகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய் சந்திரிகா தலைமையில் பனை விதை நடவு செய்யப்பட்டது.
மேற்கண்ட பனை விதைகள்75 ஆயிரம் விதைகள் தோட்டக்கலை துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு,பனை விதை மற்றும் விதைபந்துகள் ரெட்டியார் சத்திர ஊராட்சி ஒன்றியம் மற்றும் விழுதுகள் அமைப்பு இணைந்து மற்ற பகுதிகளில் தொடர்ந்து நடவுசெய்து மழை காலம் முடிவதற்குள் செயல்படுத்தஉள்ளோம். இங்கு நடவு செய்ய வேண்டிய ஓடையின் மொத்த நீளம் சுமார்4 கி மீ.
 இவ்வாறு நடவு செய்யும் பனை விதைகள் எல்லை கற்களை ஒட்டி நேர்கோட்டில் நடுவதால் மீண்டும் ஆக்கிறமிப்பி லிருந்து தடுக்கலாம். மேலும்  மழைக்காலங்களில்கரைகள் அரிக்கப்படுவது, உடைப்படுவது பனைவிதை நட்டு வளர்ப்பதால் தடுக்கப்படும்.
பனைமரங்கள் விவசாய நிலத்தில் அருகில் இருப்பதால் ஓர் உயிர் வேலியாக இருக்கும்... அடர்வாக நடுவதால் யானை நுழைவதை பிற்காலத்தில் தடுக்க முடியும், இதன் நிழல் விவசாயபயிர்களுக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாது எனவும்
நீர் மேலாண்மை இயக்கத்தின் முக்கிய அங்கம் பனை மரங்கள் வளர்ப்பது ஆகும் .ஆகவே நிலத்தடி நீரை சேமிக்க பனைமரங்கள் ஒன்றே சிறந்த வழி என்பதாலும் பனைமரங்கள் மிக அதிக அளவில் ஜோத்தல் நாயக்கன் கோம்பை பகுதி முழுவதும் நடவு செய்யப்பட்டு வருகிறதுஎன ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர் .இதில் தோட்டக்கலை இணை இயக்குனர் சீனிவாசன் ,தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் ,விழுதுகள் விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி ,ஊராட்சி செயலர் வீரபாண்டி ,உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து