முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வு பயத்தை போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் நெதர்லாந்து பல்கலைக்கழகம்

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஆம்ஸ்டர்டாம் : தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தையும் மன அழுத்தத்தையும் போக்க அவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் வினோதமான முறையை நெதர்லாந்து பல்கலைக்கழகம் கையாள்கிறது.

தேர்வுகள் என்றாலே மாணவர்கள் அனைவருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதிலும் பொதுத்தேர்வுகள் என்றால் இன்னும் பரபரப்புடன் காணப்படுவார்கள். அந்நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததினால் தேர்வை கோட்டை விடுபவர்களும் உண்டு. தேர்வுகளில் ஏற்பட்ட தோல்வியினால் மனமுடைந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டு. தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் நிபுணர்கள் பல்வேறு வழிமுறைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க அவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் வினோத முறையை நெதர்லாந்து பல்கலைக்கழகம் கையாள்கிறது. நெதர்லாந்து நாட்டின் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட் பௌடு பல்கலைகழகம் இந்த முறையை கையாள்கிறது. அரை மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை சவக்குழியில் மாணவர்கள் படுக்க வைக்கப்படுகிறார்கள். வித்தியாசமாக இருங்கள் என்ற படுக்கையுடன் ஒரு போர்வை, யோகா பாய் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. மாணவர்களிடையே இது மிகவும் பிரபலமாகியுள்ளது. இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில்,

இந்த முறை மிகவும் பிரபலமாகியுள்ளது, சவக்குழியினுள் படுக்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது. நிச்சயம் வேறு ஒரு நாள் அங்கு செல்வோம் என்றார். கல்லூரி வளாகத்தில் மரிப்பாய் ஒரு நாள் நினைவிருக்கட்டும் என எழுதப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து