முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு எதிரான போராட்டம் நீடிப்பு - ஈராக்கில் பலி எண்ணிக்கை 319 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாக்தாத் : ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக்கில் அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டின் பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. இதனை முன்வைத்து திரளான மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். தலைநகர் பாக்தாத்தில் போராட்டத்தில் நடந்த வன்முறையில் 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக்கில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஈராக் பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவார்கள். பாதுகாப்பு அதிகாரிகளும் வன்முறையில் இறந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து