எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால், அணைகள், ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியது. இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 2 செ.மீ., கடலூர், பாம்பன், கடலூர், பாம்பன், புதுச்சேரி, பாநாசம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


