டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் வெற்றிகளை குவிப்போம் - வங்காளதேச கேப்டன்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      விளையாட்டு
bangladesh captain 2019 11 18

இந்தூர் : இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காளதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்களில் படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியை அந்த அணி கேப்டன் மொமினுல் ஹக்கால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றாலும், இன்னும் 2அல்லது 3 ஆண்டுகளில் வெற்றிகளை குவிப்போம் என்று மொமினுல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொமினுல் ஹக் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடன் பயிற்சியாளருடன் இணைந்து டெஸ்ட் அணியை பற்றி விவாதிக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும். அணியின் கட்டமைப்பு பற்றி விவாதிக்க முடியும். தற்போது எங்களால் உடனடியாக வெற்றிகளை பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் எங்களால் வெற்றியை ஈட்ட முடியும். மனதளவில் தயாராகிவிட்டால், நேர்மறையாக சிந்திக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட் கட்டமைப்பு பற்றி யோசித்தால் மனநிலை அதிலேயே இருக்க வேண்டும். அதன்பின் தானாகவே டெஸ்ட் போட்டியை பற்றி சிந்திக்க தோன்றும்.

நாங்கள் ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளோம். கடைசி ஏழு மாதங்களில் பார்த்தீர்கள் என்றால், இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளோம். மற்ற அணிகளைப் போன்று நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இது மிக முக்கியமான வேறுபாடு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து