முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசிக்கு பதில் சங்கரன்கோவிலை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிய மனு: தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தென்காசிக்கு பதில் சங்கரன்கோவிலை தலையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.

இது தொடர்பாக சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்க ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என 2005-ல் இருந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த கோரிக்கை தொடர்பாக அரசுக்கு பல முறை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர் நவம்பர் 12-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார். தென்காசியை மாவட்டமாக அறிவிப்பதற்கு முன்பு அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை, தொலைவு, போக்குவரத்து வசதி, மக்கள் நலன் உள்ளிட்டவை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் ஆலோசிக்கவில்லை. எனவே தென்காசி மாவட்டம் உருவாக்கப்படுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும், அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து