முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்: ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் துவக்கம்: 10 ஆயிரம் மீனவர்கள் வேலைவாய்ப்பு இழப்பு.

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-   இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் உள்பட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மேலும் ரோந்து கப்பலை வைத்து படகுகள் மீது மோதி படகை சேதப்படுத்தி கடலில் தாழ்த்த முயற்ச்சி செய்கின்றனர். மீனவர்களை கைது செய்து  பல நாட்கள் சிறையில் அடைத்து விடுகின்றனர்.அதுபோல வலைகள் உள்பட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி  அச்சம் ஏற்படுத்துவதால் மீனவர்கள் மிகவும் வேதனையோடு கரைதிரும்பி வருகின்றனர். மேலும்  ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம் சில மீனவர்களுக்கு  பல ஆயிரக்கணக்கான ருபாய்  நஷ்டம் ஏற்படுகிறது.இதனால் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தவிக்கும் சூழ்நிலைகள் ஏற்படுகிறது.இதனை யொட்டி ராமேசுவரம்  மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்தக்கோரியும், இம்மாதம் 29 ஆம் தேதி இந்தியா வருகை தரும்   இலங்கை அதிபர் ராஜபட்ஷை சந்தித்து தமிழக மீனவ பிரதிநிதிகள் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகள் ஆகியோர்களுடன்  நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இரு அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக நேற்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் ராமேசுவரம் கடல் பகுதியில் 720 விசைப்படகுகளுக்கு மேல்  பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.மேலும் சுமார் 3500 மீனவர்கள மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.அதுபோல மீன்பிடி தொழிலை சார்ந்த தொழிலாளிகள்  என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் 1 கோடி ருபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக  மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனால் மீனவர்களின் கோரிக்கையை மத்திய.மாநில அரசுகள்  பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து