முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை ஏன் கைவிட்டீர்கள்? மக்கள் முன் மீண்டும் குமாரசாமி கண்ணீர்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் குமாரசாமி, மண்டியா மக்களே என்னை ஏன் கைவிட்டீர்கள்? என கேட்டு மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.

கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள 15 இடங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மண்டியாவில் உள்ள கே.ஆர். பேட்டையில் ம.ஜ.த. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி அண்மையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது,

மண்டியா மக்கள் என் மக்கள் என்று நம்பித்தான் இங்கு எனது மகனை தேர்தலில் போட்டியிட வைத்தேன். ஆனால் நீங்கள் என்னை கைவிட்டு விட்டீர்கள். எனது மகன் தோற்றதை நினைத்து நான் அதிகம் வருத்தப்படவில்லை. எனது மக்களே என்னை கைவிட்டு விட்டார்களே என்று நினைத்துதான் அதிகம் வருந்தினேன். சொந்த ஊரில் தோற்றபின், அரசியலில் எனக்கு ஏதாவது மான மரியாதை இருக்குமா? எதற்காக நான் அரசியலில் இருக்க வேண்டும்? தினமும் சாப்பிடும் 2 வேளை சோற்றுக்காக நான் அரசியல் செய்ய வேண்டுமா? யாரை நம்பி நான் அரசியல் செய்வது? தன்மானத்தை இழந்து அரசியல் செய்ய வேண்டுமா? மண்டியா மக்களே என்னை ஏன் கைவிட்டீர்கள்?” என கேட்டு மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.

பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்ட குமாரசாமி, எனக்கு 2 முறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த நிலையுடன் கடந்த ஒரு வாரமாக கர்நாடகா முழுக்க பிரச்சாரம் செய்கிறேன். உங்களைப் போன்ற ஏழை மக்களுக்காகத் தானே நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். என்னை கைவிட்டது நியாயமா? என தழு தழுத்த குரலில் குமாரசாமி கேட்க, கூட்டத்தில் இருந்தவர்கள் நாங்க இருக்கிறோம், அண்ணா அழாதீங்க என்று குரல் எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து