கருணாநிதியின் மைத்துனர் ராஜரத்தினம் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      தமிழகம்
Rajaratnam passed away 2019 12 08

திருவாரூர் : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மைத்துனர் கோ.ராஜரத்தினம் (86), வயது முதிர்வு காரணமாக காலமானார்.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணன் கோ. ராஜரத்தினம். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள கோவில் திருமாளம் கிராமத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது உடலுக்கு கருணாநிதியின் மகள் செல்வி, திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ. மதிவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை புங்கராயநல்லூரில் உள்ள மயானத்தில் ராஜரத்தினத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. மறைந்த அவருக்கு பங்கஜம் என்ற மனைவி, வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து