அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      உலகம்
trump 2019 11 17

வா‌ஷிங்டன் : அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட கூடாது என ர‌ஷ்யாவுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ர‌ஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ர‌ஷ்ய அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த புகார் தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக் குழு சுமார் 2 ஆண்டு காலம் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ததது. அதில், 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ர‌ஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது என ர‌ஷ்யாவுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ர‌ஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,

செர்ஜி லாவ்ரோவுடன், உக்ரைன் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்திய அதிபர் டிரம்ப், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தலையிடுவதற்கு ர‌ஷ்யா எந்தவொரு முயற்சிகளையும் செய்யக் கூடாது என கடுமையாக எச்சரித்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டிரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த செர்ஜி லாவ்ரோவ், தாங்கள் இருவரும் தேர்தல் குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை எனக் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து