Idhayam Matrimony

போர்களை எதிர்கொள்ள தொழில்நுட்பம் தேவை: முப்படை தலைமை தளபதி பேச்சு

புதன்கிழமை, 16 ஜூலை 2025      இந்தியா
Army-camp 1

புதுடில்லி, 'இன்றைய போர்களை எதிர்த்துப் போராட நாளைய தொழில்நுட்பம் தேவை' என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

டில்லியில், நடந்த பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில், அனில் சவுகான் பேசியதாவது: நேற்றைய ஆயுதங்களால் இன்றைய போர்களை வெல்ல முடியாது. இன்றைய போர்களை எதிர்த்துப் போராட நாளைய தொழில்நுட்பம் தேவை. காலாவதியான ஆயுதங்களைக் கொண்டு இந்தியா நவீன போர்களை எதிர்கொள்ள முடியாது.மே 10ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியபோது, பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியது. அவற்றில் எதுவும் இந்திய ராணுவத்திற்கோ அல்லது சிவில் உள்கட்டமைப்பிற்கோ எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. ட்ரோன் தொழில்நுட்பங்களை உருவாக்குவது மிகவும் அவசியம்.

நாம் ட்ரோன்களைப் பற்றிப் பேசும்போது, இவை என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.போரில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவருகிறதா? என்று கேள்வி கேட்கிறீர்கள். அவற்றின் செயல்பாடுகள் மிகவும் புரட்சிகரமானது என்றும் நான் நினைக்கிறேன். பரிணாம மாற்றங்கள், போர் சண்டை உபகரணங்களை சிறியதாகவும், வேகமாகவும், இலகுவாகவும், திறமையாகவும், மலிவு விலையிலும் ஆக்கியுள்ளன. இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து