மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்பினார் வெயின் பிராவோ

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      விளையாட்டு
Bravo 2019 12 13 0

டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக கருதப்படும் வெயின்  பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு  திரும்பியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ. தனது துல்லியமான பந்து வீச்சால் டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்விகளை சந்தித்ததால், சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் வகையில் விதிமுறையை மாற்றி அமைத்தது. இதனால் கிறிஸ் கெய்ல், பொல்லார்டு போன்றோர் அணிக்கு  திரும்பியுள்ளனர். இந்நிலையில் டி20 அணிக்கு மீண்டும் திரும்புகிறேன் என்று பிராவோ அறிவித்துள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டை தவிர மற்ற வகை கிரிக்கெட்டிற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து