குடியுரிமை திருத்த சட்டத்தினால் தீவிரவாதம் பரிபூரணமாக குறையும்:திருமங்கலத்தில் மன்னார்குடி ராமானுஜ ஜீயர் பரபரப்பு பேட்டி:

19 terrorissm

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமம் செல்லும் வழியில் அமைந்துள்ள சத்யயுக சிருஷ்டி கோவிலுக்கு மன்னார்குடி ஸ்ரீ செண்டலரங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் நேற்று வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் மன்னார்குடி ராமனுஜ ஜீயர் சுவாமிகள் பேசுகையில்:
நித்தியானந்தா செய்திருப்பது தேச துரோகம்.அவரது கைலாசம் யாகமோ கைலாச கண்டமோ கிடையாது.கைலாசத்தை சிருஷ்டிப்பேன் என்று நித்தியானந்தா சொல்கிறார்.கங்கை,சிந்து,நர்மதை,காவிரி உள்ளிட்ட புனித நதிகள் எல்லாம் இங்குள்ள ஹிந்து ராஷ்டிரத்தில் இருக்கிறது.வெளிநாட்டிற்கு போனாலும் இங்குள்ள கங்கையை எடுத்துச் செல்லமுடியாது.தர்மத்தையும்,ஜனத்தையும்,தேசத்தையும் ஏமாற்றுவதற்காக நித்தியானந்தா வெளிநாட்டுக்குப் போய் இங்குள்ள ஜனங்களை ஏமாற்றி வருகிறார்.கர்நாடாக மாநிலத்திலிருந்து இன்டர்போல் உள்ளிட்டோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநில போலீசாரும் இந்திய அளவில் தேடி வருகின்றனர்.கூடிய விரைவில் நித்தியானந்த கைதியாகிவிடுவார்.தேச துதோகத்திற்கும் தர்ம துரோகத்திற்கும் கவுளுக்கு அவர் செய்த அதர்மத்திற்கும், கடவுளின் பெயரில் அவர் செய்து வரும் அதர்மத்திற்கும் நல்ல ஒரு படிப்பினை கிடைக்கும்.
நித்தியானந்தா பக்கத்தில் பெண்களை வைத்து சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்தார்.அவருடைய சொரூபம் நமக்கு தெரியாமல் இருந்தது.இப்போது தெரிய வந்ததால் அவரை குறித்து புகார் கொடுத்துள்ளோம்.பெண்களுக்கு அவமானம் ஏற்படக்கூடாது.அதற்கான நடவடிக்கை மேற்கொள்வே புகார் கொடுக்கப்பட்டுள்ளது.குடியுரிமை சட்டத்தின் வந்திருப்பதால் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள தர்ம துரோகிகளால் தீவிரவாதம் பரிபூரணமாக குறையும். காஷ்மீர், அசாம்,நாகலாந்து ,மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை சட்டம் வந்ததினால் விதேசிகள் கண்டறியப்படுவார்கள்.யாத்திரையாக வந்தவர்கள் இங்கு தங்கிவிட்டு குடிமகனாக இருக்க முடியாது.வெளிநாடுகளுக்கு டூரிஸ்ட் பாஸ்போர்ட்டில் செல்பவர்கள் காலம் கடந்து அங்கு தங்கினால் விரட்டியடித்து விடுவார்கள்.ஆனால் இங்கு அது கிடையாது.இனிமேல் குடியுரிமை சடத்தின் கீழ் அவர்கள் அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து