தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு - வாடிக்கையாளர்கள் அதிருப்தி

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2019      வர்த்தகம்
gold rate 2019 12 04

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தங்கத்தோடு வெள்ளி விலையும் நேற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று (டிசம்பர் 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,644 ஆக இருந்தது.  நேற்று  தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல,  8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 56 ரூபாய் உயர்ந்து 29,152 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் நேற்று அதிகரித்து இருந்தது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 3,826 ரூபாயாக இருந்தது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,608 ரூபாயாக அதிகரித்தது.  தூய தங்கத்தின் விலையும் 56 ரூபாய் உயர்ந்திருந்தது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.48.40 ஆக உயர்ந்தது.  ஒரு கிலோ வெள்ளி 48,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 200 ரூபாய் உயர்த்தப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து