முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில்லா தமிழகம் என்ற இலக்கினை அடைய அனைத்து மக்களும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடவும், மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து, தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும்  சாலைப் பாதுகாப்பு வாரம்  கடைபிடிக்கப்படுகிறது.  இந்த ஆண்டு, 31-வது சாலைப் பாதுகாப்பு வார விழா 20.1.2020 முதல் 27.1.2020 வரை (26.1.2020 நீங்கலாக) கடைபிடிக்கப்படும். இச்சாலைப் பாதுகாப்பு வார விழாவில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து திரையரங்குகளில் திரையிடுதல் மற்றும் ஈர்ப்பு இசை விளம்பரங்கள் தயாரித்து அகில இந்திய வானொலி மூலமாக பண்பலை சேனல்களில் ஒலிபரப்புதல், அவசர விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சாலைப் பாதுகாப்புப் பணிகளை  ஊக்குவிக்கும் வகையில், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையரகத்திற்கும் முதல்வரின் விருது வழங்குதல் போன்ற பல்வேறு சாலைப் பாதுகாப்பு திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின்படி 2016-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2020-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைத்திட வேண்டும் என்ற இலக்கை அடைய அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மேற்கொண்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2019-ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.60 சதவீதம் என்ற அளவிலும், சாலை விபத்தால்  ஏற்படும் உயிரிழப்புகள் 43.10 சதவீதம் என்ற அளவிலும்  குறைந்துள்ளன.  மேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2019-ம் ஆண்டில் 3 நபர்களாக குறைந்துள்ளது. அத்துடன், தமிழ்நாடு அரசின் ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், விபத்துக்கள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு  வருகின்றன.  சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்திடவும், விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடவும், மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து, தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் முதல்வர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து