நாக்பூர் புதிய மெட்ரோ வழித்தடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      இந்தியா
PM Modi 2020 01 27

மும்பை : நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார்.

நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் போக்குவரத்து பிரச்னையை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு, 2014ம் ஆண்டு வரை 250 கிமீ தொலைவுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் சேவையை கட்டமைத்தது. ஆனால், 2014க்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை 650 கிமீ என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டது. மேலும், 800 கிமீ தொலைவுக்கு இந்த பணி நடைபெற்று வருகிறது.  வலிமையான அரசை ஏற்படுத்தியதன் மூலம் மெட்ரோ ரயில் சேவை 250 கிமீ.ல் இருந்து 650 கிமீ ஆக அதிகரித்துள்ளது. 

குறுகிய காலத்தில் 400 கிமீ அளவுக்கு இந்த சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, புனே உள்ளிட்ட நகரங்களில் 800 கிமீ தொலைவுக்கு இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில்; மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்ரோ வழித்தடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். முதற்கட்ட மெட்ரோ கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட ‘ஆரஞ்ச் லைன்’ என்று அழைக்கப்படும் காப்ரி முதல் சிதாபுட்லி வரையிலான முதற்கட்ட வழித்தடத்தை ஏற்கனவே பிரதமர் மோடி தான் திறந்து வைத்தார். 

இந்நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் நாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இதனை அவர் திறந்து வைக்கிறார். இந்த மெட்ரோ பாதை 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நாக்பூரில் லோக்மண்யா நகர் முதல் சீதாபுல்டி வரையுள்ள அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து