முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நினைவுகூர்ந்த திலக் வர்மா

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      விளையாட்டு
24-Ram-58

Source: provided

ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நாங்கள் உண்மையில் ஒரு மணிநேரம் மைதானத்தில் காத்திருந்தோம். டிவி காட்சிகளைப் பார்த்தால், நான் தரையில் படுத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். மீதமுள்ளவர்களும் தரையில் படுத்திருந்தனர். அர்ஷ்தீப் சிங் ரீல்ஸ் செய்வதில் மும்முரமாக இருந்தார். நாங்கள் காத்திருந்தோம், 'கோப்பை எப்போது வேண்டுமானாலும் வரும்' என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நாங்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கோப்பை வரவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பையைப் பெறப் போவதில்லை என்பதை அறிந்ததும், அர்ஷ்தீப் சிங்தான் ஒரு ஐடியா கொடுத்தார். கோப்பையை தவிர்த்து கொண்டாட வேண்டும் என்று அவர் கூறினார். அபிஷேக் சர்மா உள்ளிட்ட நாங்கள், மேலும் 5-6 பேருடன் சேர்ந்து, அதற்கு ஒப்புதல் அளித்தோம். பின்னர் அதையே செய்து காட்டினோம் என திலக் வர்மா கூறினார்.

தொடரை வென்ற இங்கிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது, பலத்த மழை கொட்டியதால் அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டமும் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

ரஞ்சி கோப்பையில் ஜடேஜா

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சவுராஷ்டிரா அணிக்காக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சவுராஷ்டிரா அணி தனது 2-வது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை ராஜ்கோட்டில் சந்திக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து