Idhayam Matrimony

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      விளையாட்டு
24-Ram-54

Source: provided

மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

24-வது லீக் ஆட்டம்...

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நவி மும்பையில் நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஜெமிமா அபாரம்...

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்கள் குவித்தார். இதையடுத்து, 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மழை காரணமாக 44 ஓவரில் 325 ரன்கள் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

271 ரன்கள் மட்டும்...

அந்த அணியின் புருக் ஹாலிடே தனியாளாகப் போராடி 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு வீராங்கனை இசபெல்லா கடைசி வரை போராடி 65 ரன்கள் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து 45 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து