Idhayam Matrimony

மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்பொழுது பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை, கடந்த 16-ம் தேதி தமிழகத்தில் தொடங்கியது. சற்று தாமதமாக தொடங்கினாலும், அதன் வேகம் மிக தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததால் அதற்கேற்ற வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் மழை நிலவரம், கனமழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பல்வேறு மாவட்டங்களில் மழை நிலவரம், மழை பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து