முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      விளையாட்டு
24-Ram-55-A

Source: provided

மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்,  வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இதில் கபடி போட்டியில் இந்திய ஆடவர்- மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. 

ஈரான் அணியை...

இறுதிப்போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 75-21 என்ற கணக்கில்வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.இந்த வெற்றிகளால் இந்தியாவின் மொத்த பதக்கங்கள் 10 ஆக உயர்ந்துள்ளன (2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்). தற்போதைய பதக்கப் பட்டியலின்படி, சீனா 7 தங்கப் பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது. 

துணை முதல்வர் வாழ்த்து....

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் , இந்திய கபடி அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம். பெண்கள் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், ஆண்கள் அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை. தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது அரசு விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து