எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : தமிழகமெங்கும் 31 - வது சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு நிகழ்ச்சியாக மதுரையில் உள்ள கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்ட நெடுஞ்சாலை துறை மற்றும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் பாதுகாப்பு வார விழா கல்லுப்பட்டி பேருந்து நிலையம் முன்பு முன்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணி முடியும்வரை நடந்தார்.இதில் மதுரை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன் பேரையூர் உதவி கோட்ட பொறியாளர் காமராஜ் திருமங்கலம் உதவி கோட்ட பொறியாளர் சுகுமார் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் முத்தையா வருவாய் கோட்டாட்சியர் பூர்ண லதா காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மதியழகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.சுமார் 1000 - க்கும் அதிகமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
மனித உயிர் விலை மதிக்க முடியாதது. ஆதலால் சாலை விபத்துகளை குறைக்கும் வண்ணம் தொடர்ந்து அம்மாவும் சரி, தற்போது முதலமைச்சரும் சரி பல்வேறு அறிவுரைகளை வழங்கி இதற்கான நிதியினை வழங்கி வருகின்றனர்.இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை மத்திய அரசு கணக்கீட்டது அதில் 29 மாநிலங்களில் தமிழகத்தில் தான் சாலை விபத்து குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் தான் தரமான சாலைகள் உள்ளது. எந்த குக்கிராமம் எடுத்துக்கொண்டாலும் சாலைகள் தரமுடன் உள்ளது. இதன் மூலம் வாகனங்களில் செல்வோர் எந்த விபத்தும் இல்லாமல் சிரமமின்றி செல்கின்றனர். சாலையில் விபத்து ஏற்பட்டு அதன் மூலம் எந்த உயிர் இழப்பு ஏற்படக் கூடாது என்று இதற்காக சாலை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறார்.சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தமிழகத்தில் சாலை விபத்து குறைவாக உள்ளது தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின் பற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தை சாலை விபத்து இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் நோக்கமாகும். ஆகவே வாகனங்களில் செல்வோர் எல்லாம் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஏனென்றால் உங்கள நம்பி குடும்பம் உள்ளது அதை நினைத்துக்கொண்டு நிதானமாக சென்றாலும் விபத்து நிகழாது என்று கூறினார். அதனைத்தொடர்ந்து பேரணியாக செல்லும்போது பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள்,இருசக்கர வாகன ஓட்டுனர்கள் ஆகிய இடத்தில் துண்டு பிரசுரம் கொடுத்து சாலைவிதிகளை பின்பற்றுமாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


