கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      தமிழகம்
Kumari 2020 01 28

Source: provided

கன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.   

சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு உள்ள வெங்கடாசலபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து ஒராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இங்கு வரும் அனைத்து பக்தர்களும் லட்டுபிரசாதம் எப்போது வழங்கப்படும் என்று கேட்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார். அதன்படி விரைவில் லட்டு பிரசாதம் வழங்கப்படும். முதல் கட்டமாக இன்னும் 15 நாளில் ஒவ்வொரு சனிக்கிழமையும் லட்டுபிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரிக்கு வரும் பக்தர்கள் வெங்கடாசலபதி கோவிலுக்கு வருவதற்கு வசதியாக கன்னியாகுமரியில் இருந்து இலவச பஸ் வசதி செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின்போது திருமலை திருப்பதி தேவஸ்தான துணைத்தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, தேவஸ்தான உறுப்பினர் மோகன்ராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து