கொரோனா எதிரொலி: பார்முலா-1ன் சீனா கிராண்ட் பிரிக்ஸ் ஒத்திவைப்பு

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2020      விளையாட்டு
China Grand Prix 2020 02 12

பார்முலா-1 கார் பந்தயத்தில் ஷாங்காய் நகரில் நடைபெற இருந்த சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல சுற்றுகளாக பார்முலா 1 கார்பந்தயம் போட்டி நடைபெறும். இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார். இந்த வருடத்திற்கான முதல் சுற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மார்ச் மாதம் 15-ம் தேதி நடக்கிறது. அதன்பின் பஹ்ரைனில் 22-ம் தேதியும், வியட்நாமில் ஏப்பல் ஐந்தாம் தேதியும் நடக்கிறது.

4-வது சுற்று சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஏப்ரல் 19-ம் தேதி நடப்பதாக இருந்தது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் பாதிப்பு நீண்ட நாட்களாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் சீனா கிராண்ட் பிரிக்ஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து