எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்காக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். இதில், நீர்வளத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
பாசன ஏரிகளைப் புனரமைப்பதற்காக 510.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் 1,364 நீர்ப்பாசனப் பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும். 2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.5,000 ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிப்பில் உள்ள சிறிய பாசன ஏரிகள், கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 25 ஆயிரம் குளங்கள் மற்றும் ஊரணிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, சிறப்பு ஒதுக்கீடாக 500 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 750 கோடி ரூபாய் நிதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் உள்ள 30 ஆயிரம் பணிகளில் 21 ஆயிரத்து 444 பணிகள் நிறைவடைந்துள்ளன. 2020-2021 ஆம் ஆண்டில் கிராமங்களில் மீதமுள்ள குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆழப்படுத்துதல், நகர்ப்புறங்களில் உள்ள கோயில் குளங்கள் புனரமைப்பு ஆகிய பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும். இவை நிலத்தடி நீர் அமைப்புகளை செறிவூட்டுவதுடன், மிக அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட ஒன்றியங்களில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். 2020-2021-ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள கால்வாய்களில் 392 தூர்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்திற்கு முன்னதாக, நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன் மேற்கொள்ளப்படும். 2020-2021 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1,560 கோடி ரூபாய் செலவில் பருவகால மாற்ற தழுவல் திட்டத்தைச் செயல்படுத்தும் பணி காவிரி பாசனப் பகுதியில் முழுவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 105.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,995 கோடி ரூபாய் திட்டச் செலவில் என்.ஆர். உப வடிநிலத்தில் ஏனைய பகுதிகளை இத்திட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.கட்டளை உயர்மட்ட கால்வாய் பணிக்காக 335.50 கோடி ரூபாயும் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நொய்யல் துணைப்படுகை திட்டம், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ராஜகால்வாய் திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெள்ள உபரிநீரினை மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தின் வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான சாரபங்கா நீரேற்று பாசனத் திட்டம் 565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 493.25 கோடி ரூபாய் செலவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கதவணை மற்றும் 387.60 கோடி செலவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கான 11 ஆயிரத்து 250 கோடி மதிப்பீட்டிலான முதல்நிலை திட்ட அறிக்கை இந்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திடத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் முதல்கட்ட திருத்தச் செலவினம் 703.49 கோடி ரூபாயுடன், 89 அணைகளும் 2 பாசனப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் ஜூன், 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 கட்டங்களுக்கும் சேர்த்து 2020-2021 பட்ஜெட்டில் 220.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
18 உப வடிநில பகுதிகளில், 1,325 குளங்கள் மற்றும் 107 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குளங்கள் மற்றும் 2 முதன்மை பாசன கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல்கட்டமாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஜூலை 2023-ல் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநில பகுதிகளில் 906 குளங்கள், மற்றும் 183 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமான பணிகள் 649.55 கோடி செலவில் 2020-2021 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 7,267 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படுதல் மற்றும் முதல் நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2014-2015 முதல் 2019-2020 ஆம் ஆண்டு வரை 2,241.19 கோடி மதிப்பீட்டிலான நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை உருவாக்குதல் புதிய அணைக்கட்டுகளை கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால்களை அமைப்பதற்கான 307 பணிகளை செயல்படுத்தியதில் 261 பணிகள் நிறைவடைந்து மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-2021 பட்ஜெட்டில் நபார்டு உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த 655.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2020-2021 பட்ஜெட்டில் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி 6,991.89 கோடி ரூபாயாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற