தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
dhanapal speaker 2020 02 14

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வரும் 20-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்கள் நிறைவடைந்தன. இதையடுத்து, சட்டப்பேரவை வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடும் என  சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதற்கிடையே, சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 4 நாட்கள் கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் தனபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்ஜெட் கூட்டத் தொடர் வரும்  20-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார்.இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு 17-ம் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை கூடுகிறது. 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறுகிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் 20-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து