எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : அரசின் மூன்றாண்டு சாதனை மலர்கள் மற்றும் குறுந்தகட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா அரசின் - “முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்குச் சான்று” என்ற மூன்றாண்டு சாதனை மலர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்ட அரசின் மூன்றாண்டு சாதனை மலர்கள், சட்டசபையில் முதல்வர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு, பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு, சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகளின் தொகுப்பு, முதல்வர் ஆற்றிய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட முத்தான கருத்துரைகள், மூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அம்மாவின் வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த மூன்றாண்டுகளில், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது, நீர் நிலைகளை பாதுகாக்க குடிமராமத்துத் திட்டம், நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியது, 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், முதல்வரின் வெளிநாட்டு பயணங்களின் மூலம் ரூ.8,835 கோடி முதலீடுகளை ஈர்த்தது, 2.05 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம், விவசாயிகளின் நலனுக்காக காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க “நடந்தாய் வாழி காவேரி திட்டம்”, சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமைத்தல், மகளிர் பாதுகாப்பிற்காக “காவலன் செயலி”, தமிழ்நாடு இ-வாகன கொள்கை-2019 வெளியிட்டது, விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இடஒதுக்கீடு, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம், கிருஷி கர்மான் விருதினை 5 முறை பெற்றது, ஊராட்சிகளில் மின்னணு ஆளுமை, வலிமைப்படுத்துதல், குழந்தைகள் நேயம், வலுவான கிராம சபை செயல்பாட்டிற்கென 12 தேசிய விருதுகள், உடல் உறுப்பு தானத்தில் 5 முறை தேசிய விருது, ஊரக வளர்ச்சித்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக 104 விருதுகள், இணைய வழி கற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது, மூத்த குடிமக்கள் சேவைக்காக தேசிய விருது என பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் தமிழ்நாடு அரசு பெற்று தொடர்ந்து முன்னேறி வருகிறது. எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், இந்த ஆட்சியும் இயக்கமும் மக்களுக்காகவே பணியாற்றும் என்ற அம்மாவின் வாக்கினை நிறைவேற்றும் வகையில், பரந்த பாரதத்தில் தன்னிகரற்ற மாநிலமாய் தமிழ்நாடு தழைத்திட அர்ப்பணிப்போடு நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா அரசின் - “முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்குச் சான்று” என்ற மூன்றாண்டு சாதனை மலர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சட்டசபையில் முதல்வர் ஆற்றிய உரைகள், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள் ஆகியவற்றினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிடதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை மலர்கள், முதல்வர் ஆற்றிய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட முத்தான கருத்துரைகள், மூன்றாண்டு சாதனை குறும்படங்களின் குறுந்தகட்டினை வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக் கொண்டார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காலப்பேழை புத்தகத்தினை வெளியிட தலைமைச் செயலாளர் சண்முகம், பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வரவேற்புரை ஆற்றினார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025