குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை - தி.மு.க.வுக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      தமிழகம்
dhanapal-speaker 2020 02 17

சென்னை : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் தனபால் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று மறுத்து விட்டார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்து வருகிறது. 13-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதை எதிர்த்து வருகின்றன. தமிழக சட்டசபையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. சார்பில் நேரமில்லா நேரத்துக்குப் பின் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும் முன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்த தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதி மறுத்து விட்டார். ஏற்கெனவே இதே போன்று அனுமதி கேட்டு மறுத்த நிலையில் மீண்டும் அனுமதிக்க வாய்ப்பில்லை எனப் பேரவை விதி 173-ன் கீழ் அனுமதி மறுத்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட அனுமதியில்லை என்று சபாநாயகர் தனபால் கூறினார். ஆனால், வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து பேசலாம் என ஸ்டாலினுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து