எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சபரிமலை : மிகவும் பிரசித்திப் பெற்ற ஆன்மீக தலமாக விளங்கும் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை நேற்று (18-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு அடைக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது.
கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வெளிநாட்டு பக்தர்களும் சபரிமலைக்கு அதிகளவு வருகை தருகிறார்கள்.
சபரிமலையில் நடை பெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்து சாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதமும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். மாசி மாத பூஜைக்காக கடந்த 13-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடைபெற வில்லை.
மறுநாளில் இருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை போன்ற விசேஷ பூஜைகளும் நடந்தது. மாசி மாத பூஜையையொட்டி முதல் நாளில் இருந்தே சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
நேற்று (18-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிச னம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த தால், போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |