எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவது இன்று (புதன்கிழமை) உறுதியானால், அக்கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் டி.டி.வி.தினகரன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் ஏறுவார்கள் என்று கூறப்படும் நிலையில் அதற்கான இறுதி முயற்ச்சி எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கூட்டணியை வலுப்படுத்துவதற்காக சில கட்சிகளுடன் திரை மறைவில் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.இந்த நிலையில், வரும் 23-ந் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஏற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வருகிறார். இன்று (புதன்கிழமை) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. இருக்கும் கூட்டணியில் நான் இருக்கமாட்டேன் என்று முதலில் முரண்டு பிடித்த டி.டி.வி.தினகரன், பிறகு பா.ஜ.க. தலைவர்கள் பேசிய பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது. அவர் 7 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது. அதேபோல், தே.மு.தி.க.வை பொறுத்தவரை இன்னும் கூட்டணி முடிவை எடுத்ததாக தெரியவில்லை. அ.தி.மு.க., திமுக என இருபுறமும் பேசி வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வும் அ.தி.மு.க. இடம் பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தே.மு.தி.க.வையும் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இன்று பியூஷ் கோயல் சந்திப்புக்கு பிறகு அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் என்று தெரிகிறது. மதுராந்தகத்தில் 23-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, த.மா.கா. தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவது இன்று (புதன்கிழமை) உறுதியானால், அக்கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் டி.டி.வி.தினகரன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் ஏறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


