முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      வர்த்தகம்
Image Unavailable

தரம் உயர்த்தப்பட்ட பி.எஸ்.-6 இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கேற்ப அன்றைய தினமே உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருள்களுக்கு இந்தியா மாறுகிறது.

உலகில் எந்த நாடும் மிகக்குறைவாக 3 ஆண்டுகளுக்குள் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தது இல்லை. ஆனால், இந்தியா மட்டுமே குறுகிய காலத்தில் அதாவது யூரோ-4 எரிபொருள் கொண்டு வந்த அடுத்த 3 ஆண்டுகளுக்குள் யூரோ-5 எரிபொருட்களுக்குச் செல்லாமல் நேரடியாக யூரோ-6 எரிபொருளுக்கு மாறுகிறது.

சமீப காலமாக இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு இணையாக உயர்ந்து வருகிறது. இந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை அதிகளவில் நச்சுத் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றது.  அதிலும், பெட்ரோல் வாகனத்தை விட டீசல் வாகனத்தில் அதன் அளவு மிகவும் அதிகளவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இது, புவி வெப்ப மயமாதல் மற்றும் பல்வேறு வியாதிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.  ஆகையால், இதில் தீர்வு காணும் விதமாகவே பி.எஸ்.-6 மாசு உமிழ்வு தரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி.எஸ்.-4 தரம் கொண்ட எஞ்ஜின்களை உடைய வாகனங்களைவிட மிக மிக குறைந்தளவு நச்சு தன்மையையே வெளிப்படுத்துகின்றன. இதன் காரணமாகவே, 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின்னர் பி.எஸ்.-6 தரத்திற்கு குறைவான வாகனங்களை விற்பனை அல்லது உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பி.எஸ்.-6 தரத்திற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளையும் விற்பனைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து