எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கெய்ரோ : எகிப்து நாட்டில் 1981- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த ஹோன்சி முபாரக் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
எகிப்து நாட்டில் 1981-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோன்சி முபாரக். இவர் உடல்நல குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு வயது 94. தொடர்ந்து 30 ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்த முபாரக்குக்கு எதிராக 2011-ம் ஆண்டு அந்த நாட்டில் மாபெரும் புரட்சி வெடித்தது. முபாரக்கை பதவி விலகக்கோரி லட்சக்கணக்கான வாலிபர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 18 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தில் சுமார் 900 போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, ராணுவம் அவருக்கு நெருக்கடி கொடுத்ததால் அவர் பதவி விலகினார். அதனை தொடர்ந்து போராட்ட க்காரர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக முபாரக் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 2014 -ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது. இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |