டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      இந்தியா
Priyanka-Gandhi 2020 02 27

புதுடெல்லி : டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர்,  பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி,  நள்ளிரவில் நீதிபதி முரளிதரை இடமாற்றம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால், நிச்சயமாக வருத்தமாகவும் வெட்கமாகவும் உள்ளது. இலட்சக்கணக்கான இந்தியர்கள்,  நேர்மையான நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். நீதித்துறையை கட்டுப்படுத்தவும், அதன் மீதான நம்பிக்கையை தகர்க்கவும் மேற்கொள்ளப்படும் அரசின் முயற்சிகள் வருந்ததக்கவை என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து