முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் இந்தியா - மியான்மர் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மியான்மர் அதிபர் வின் மைன்ட்,  நாளை 29-ம் தேதி வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் அழைப்பை ஏற்று வின் மைன்ட்இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் வின் மைன்ட், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

இதைத் தொடர்ந்து 2 நாடுகளுக்கும் இடையே சுகாதாரம், தகவல் தொடர்பு, பெட்ரோலியம், எரிசக்தி, வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு ,உள்கட்டமைப்பு உள்ளிட்ட 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் மியான்மர் அதிபர் வின் மைன்டுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் வின் மைன்ட் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருடனும் மியான்மர் அதிபர் வின் மைன்ட் சந்தித்து பேசினார். நேற்று மாலை அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். புத்த மதத்தினரின் புனித நகரமான புத்த கயாவிற்கும் மியான்மர் அதிபர் செல்ல இருக்கிறார். முன்னதாக பிரதமராக நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைன்ட் 2019 -ல் இந்தியாவிற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து