முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக கலெக்டர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம்

புதன்கிழமை, 4 மார்ச் 2020      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் வரைவாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்  தலைமையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2019 தொடர்பாக தயார் செய்யப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது:- தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களை நடத்துவதற்காக 14.02.2020-ல் வெளியிடப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பதற்கான பூர்வாங்கப் பணி நடைபெற்று வருகிறது.  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய வார்டு வாரியாக பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் மொத்தமுள்ள 7 பேரூராட்சிகளில் 37,760 ஆண் வாக்காளர்கள், 38,402 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 இதர வாக்களர் (திருநங்கைகள்) ஆக மொத்தம் 76,165 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
 மொத்தமுள்ள 4 நகராட்சிகளில் 99,410 ஆண் வாக்காளர்கள், 1,01,651 பெண் வாக்காளர்கள் மற்றும் 31 இதர வாக்காளர் (திருநங்கைகள்) ஆக மொத்தம் 2,01,092 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.  ஆக மொத்தம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1,37,170 ஆண் வாக்காளர்கள், 1,40,053 பெண் வாக்காளர்கள் மற்றும் 34 இதர வாக்காளர் (திருநங்கைகள்) ஆக மொத்தம் 2,77,257 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
 வாக்குச்சாவடி அமைக்கும் நேர்வில் நகர்ப்புற தேர்தலை பொருத்தமட்டில் ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்ச வாக்காளர்களாக 400 எனவும், அதிகபட்ச வாக்காளர்களாக 1400 எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது.  இதன்படி இந்த மாவட்டத்தில் நான்கு நகராட்சிகளில் 213 வாக்குச்சாவடிகளும், 7 பேரூராட்சிகளில் 109 வாக்குச்சாவடிகளும், ஆகமொத்தம் 322 வாக்குச்சாவடிகள் அமைக்க வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு 26.02.2020 அன்று வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் வெளியிடப்பட்டது.
 அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுகளுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.  அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் ஏதும் வரப்பெறின் அவற்றை உரியவாறு பரிசீலனை செய்து தேவைப்படின் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிப் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் அச்சுப் பிரதிகள் 06.03.2020 அன்று விநியோகம் செய்யப்படும். இவ்வாறு பேசினார்.  இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) ஆ.கணேசன் உட்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து