மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2020      அரசியல்
sarath-pawar 2020-03 06

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் பவுசினா கான் ஆகியோர் வருகிற 11-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 13-ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் பவுசினா கான் ஆகியோர் வருகிற 11-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து