சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      வர்த்தகம்
indian-oil 2020 03 29

இந்தியாவிடம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவை போதிய அளவுக்கு கைவசம் இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில்,

இந்தியாவில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை. ஏப்ரல் மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திலும் அனைத்து எரிபொருளுக்கும் தேவை இருப்பதாக மதிப்பிட்டுள்ளோம். இந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்து மட்டத்திலும் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து சேமிப்பு கிடங்குகளைத் தவிர எரிவாயு, பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. எனவே, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து