Idhayam Matrimony

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். 

திருச்சி மற்றும் புதுக்கோட்டைமாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வருகிற 9-ம் தேதி திருச்சி வருகிறார். அன்றைய தினம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு சாலை மார்க்கமாக கார் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் 10-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம். பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அன்புச்சோலை முதியோர் இல்ல செயல்பாடுகளை தொடங்கி வைக்கிறார். பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்காக கீரனூர் புறப்பட்டு செல்கிறார். கீரனூர் அருகே உள்ள களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

விழாவில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.201 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.223 கோடியே 6 லட்சம் செலவில் முடிவுற்ற 577 திட்ட பணிகளை திறந்து வைத்தும், 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு ரூ. 348 கோடியே 43 லட்சம் மதிப்பிலான மொத்தம் ரூ. 773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்ட பணிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்காக மூகாம்பிகை கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து