முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் ஜனாதிபதி திரெளபதி சந்திப்பு

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      விளையாட்டு
Murmu 2023-11-19

Source: provided

புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

நேரில் அழைத்து...

மகளிருக்கான 13 ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல்முறையாக கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (நவ. 5) டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு இந்திய அணியினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

கையெழுத்திட்ட.. 

இந்த நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில், வீராங்கனைகள் அனைவரும் கையெழுத்திட்ட இந்திய ஜெர்சியை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் குடியரசுத் தலைவருக்கு பரிசளித்துள்ளார். இத்துடன், தாங்கள் வென்ற உலகக் கோப்பையையும் குடியரசுத் தலைவர் முர்முவிடம் கொடுத்து இந்திய அணியினர் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து