Idhayam Matrimony

பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      தமிழகம்
Jayakumar 2023 04 15

சென்னை, தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை, அதை எந்த காலத்திலும் தடை செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டமானது சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் முன்மொழியப் பட்டுள்ளன. இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான கூட்டத்திற்குப்பின் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்காதது ஏன்?முதல்-அமைச்சர் தலைமையில் தான் இந்த கூட்டம் நடந்திருக்க வேண்டும் ஆனால் ஏன் வரவில்லை? அ.தி.மு.க. ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது. கூட்டங்களுக்கான விதி அனைத்துக்கட்சிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை, அதை எந்த காலத்திலும் தடை செய்யக்கூடாது. அனைவருக்கும் சமம் என்ற முறையில் விதிகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து