முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      உலகம்
Elon musk 2023-07-13

Source: provided

வாஷிங்டன்: நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் தேர்வானார். தேர்தலில் உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல பணக்காரருமான எலான் மஸ்க், டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கினார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபோது சிறப்பு இலாகா ஒன்றை உருவாக்கி எலான் மஸ்குக்கு பொறுப்பு கொடுத்தார்.

மேலும் எலான் மஸ்கின் கூட்டாளியும், தீவிர ஆதரவாளருமான ஜேரட் ஐசக்மேன் என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. இதனிடையே டிரம்ப் உடனான நட்பில் உரசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் ஏப்ரலில் விலகினார். இதனை தொடர்ந்து ஐசக்மேனின் நாசா தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டது. இந்த நிலையில் டிரம்ப்-எலான் மஸ்க் உறவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதற்கு சான்றாக நாசாவின் தலைவராக ஜேரட் ஜசக்மேனை மீண்டும் நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து