முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நன்கொடை

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1125 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.  இதே போல், மாநில அரசுகளும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி பொருள் உதவி அளிக்க வேண்கோள் விடுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அறக்கட்டளைகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES  நிதியத்திற்கும் அந்தந்த மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் விப்ரோ நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்துள்ளது. விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1125 கோடி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பினால் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து