முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை 5 - ம் தேதி இரவு 9 மணிக்கு வீடுகளில் விளக்கை அணைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

வரும் 5 - ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றும் போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஒன்று கூடி விளக்கேற்ற கூடாது என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:-

ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் வகையில், வரும் ஏப்ரல் 5 - ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். 9 நிமிடங்களுக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் டார்ச் மற்றும் அகல் விளக்குகள்,மெழுகுவர்த்திகளை ஏற்ற வேண்டும். அல்லது செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். விளக்கேற்றும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், ஒன்று கூடி விளக்கு ஏற்றக் கூடாது. இவ்வாறு அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். கடந்த மார்ச் 22 - ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போது அதன் முடிவில் கைதட்டி மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்ட வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டிருந்தார். தற்போது வரும் நாளை 5 - ம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து